ஒரு சகோதரியின் உலக சாதனை !

Share this article:

உலகம் முழுவதிலும் கேம்ப்ரிட்ஜ் IGCSE தேர்வு முறையைப் பின்பற்றும்  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பெற்ற ஏறத்தாழ 2000 பள்ளிகளின் மாணவ-மாணவியர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மருள் ஒருவராகக் கல்வியில் வாகை சூடுவது என்பது – அதிலும் “அ” தாரகை(A Star) ஆக ஜொலிப்பதென்பது – சாதாரணச் செயலன்று.

இந்த அசாதாரண சாதனையை, நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த செல்வி சல்மா புரிந்திருக்கிறார்.

ஆண்டுதோறும் கேம்ப்ரிட்ஜ் பலகலைக் கழக உலகளாவியத் தேர்வுகள்(University of Cambridge International Exams – CIE)’ மையம் நடத்தும் ‘உலகளாவிய உயர்நிலைப் பள்ளிக் கல்வி(International General Certificate of Secondary Education)’யின் 2009ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் கடந்த அக்டோபர் 2009இல் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் கடந்த பிப்ரவரி 2010இல் வெளியாகின. உலகளாவிய ஒப்பீட்டு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகியுள்ளன.

மேற்காணும் உலகளாவிய தேர்வுக்கு, மூலாதாரப் பாடத்திட்ட (The core syllabus) முறையில் 5 கட்டாயப் பாடங்களைத் தேர்வு செய்து “இ” படிநிலை விருதை வெல்லும் எளிய வழியையே பெரும்பாலான மாணவ-மாணவியர் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், “அ-தாரகைப் படிநிலை விருதை வென்றெடுப்பதற்காக ஆழமான படிப்புத் தேவைப்படும் பத்துப் பாடங்கள் அடங்கிய மீநிலைத் (Advanced syllabus) திட்டத்தை எனது தேர்வாகக் கொண்டேன்” என்கிறார் சல்மா.

நினைத்தபடியே சிறப்பாகத் தேர்வெழுதி பத்துப் பாடங்களில் ஒவ்வொன்றிலும் 95+% பெற்றிருப்பதால் செல்வி சல்மா,  “அ” தாரகை(A Star) விருது வழங்கப் பெற்றுள்ளார். இது சர்வதேச அளவிலான சிறப்பான விருதாகும்.

செல்வி சல்மாவின் பிற சாதனைகள்:

  • ஆங்கில இலக்கியத்தில் சர்வதேச அளவில் முதலிடம்.
  • உயிரியலில் சர்வதேச அளவில் மூன்றாமிடம்.
  • புவியியலில் சர்வதேச அளவில் ஒன்பதாமிடம்.

செல்வி சல்மா, தம் பெற்றோருடன் செசல்ஸ் தீவில் வசித்து வருகிறார். படிப்பும் அங்கேதான். ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி விடுப்பின்போது தம் குடும்பதினரோடு தம் தந்தை முஹம்மது ஃபாரூக்கின் ஊரான திட்டச்சேரிக்கு வந்து போவது வழக்கம்.

சாதனைச் செல்வி சல்மாவை நம் ஜமாத்தின் சார்பாக வாழ்த்துவோம்! அவர் இன்னும் பல சாதனைகள் செய்ய இறைவனிடம் இறைஞ்சுவோம் !

நன்றி: P V ஸ்ரீவித்யா – THE HINDU

General

Leave a Reply

2 Comments on "ஒரு சகோதரியின் உலக சாதனை !"

Please refrain from nicknames or comments of a racist, sexist, personal, vulgar or derogatory nature, or you may risk being blocked from commenting in our website. We encourage commentators to use their real names as their username. As comments are moderated, they may not appear immediately or even on the same day you posted them. We also reserve the right to delete off-topic comments. If you need to contact our Jamath EXCO to share any ideas or issues please use our contact us form.
Notify of

Sort by:   newest | oldest | most voted
Guest
punnahai mannan
12 years 3 months ago

வாழ்த்துக்கள் சகோதரி.

Guest
Mohamed Ayoub K
12 years 3 months ago

படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும் இணைக்கத் தயாராக இருங்கள்.
எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை இழக்கத் தயாராகி விடாதீர்கள்!
எனில்…
நீங்கள் எங்கிருந்து வந்தாலும் வெற்றி உங்கள் பக்கம்தான்.

வாழ்த்துக்கள் !!!.
================

இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே “அநீதி” இழைத்துக் கொள்கிறார்கள்.” நபிகள் [ஸல்]

wpDiscuz