ஆரோக்கியமாக வாழ ..

Share this article:

தோல் சுருக்கம் மறைய அதிகமான தண்ணீரை குடிங்க: ஆராய்ச்சி முடிவு

அழகான தோல் வேண்டும் என்று விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்தத் தோலை பாதுகாக்க என்னென்னவோ செய்கின்றனர். சிறிது சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அய்யோ போச்சே என்று கவலை அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.

தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய, நிறைய தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல் சுருக்கம் மறைவதோடு, தோலுக்கு ஈரப்பதமும் கிடைக்கிறது. இதனால் இளமையாகத் தோன்றலாம்.

இதற்கான ஆராய்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை 8 வாரங்களுக்கு தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவினர் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர். வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் உள்ள லேக் மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கையான மினரல் வாட்டராகும்

இதில் உள்ள சாலிசின் செமித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. சாலிசிலிக் ஆசிடைத் தான் பெரும்பாலான ஸ்கின் கிரீம்களில் பயன்படுத்துகின்றனர் என்பது இங்கு ஒரு உபரிச் செய்தி . அதாவது, செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாகவே நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் காணமல் போகிறது.

இதில் கலந்து கொண்ட பெண்களை ஆராய்ச்சிக்கு முன்பும், பின்பும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆராய்ச்சிக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாகத் தோன்றியுள்ளனர்.

சாதாரணத் தண்ணீர் குடித்தவர்களுக்கு 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

பிறகென்ன, பக்கெட் தண்ணீரை வைத்துக் கொண்டு படபடவென்று குடித்து தோல் சுருக்கத்தை மடமடவென்று விரட்ட வேண்டியதுதானே..!

————————————————————————————————

மூலக்கோளாறு, புற்றுநோயை விரட்டும் பீட்ரூட்

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.

மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

——————————————————————————————–

கொழுப்பைக் குறைக்கும் கொழகொழ வெண்டைக்காய்

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு.அங்கிருந்து அரேபியா, நைல நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது.

கி.பி 1600-களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா,ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் (Ladies finger) என்கிறார்கள்.

வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள Acetylated Galeturomic அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.

*பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொழுப்பை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

*கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி,குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

*வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.

*வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

*10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.

*வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.

ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:
கலோரி 25, நார்ச்சத்து – 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 IU, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் – 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் – 46 மில்லி கிராம்.

வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு.

சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.

General

Leave a Reply

1 Comment on "ஆரோக்கியமாக வாழ .."

Please refrain from nicknames or comments of a racist, sexist, personal, vulgar or derogatory nature, or you may risk being blocked from commenting in our website. We encourage commentators to use their real names as their username. As comments are moderated, they may not appear immediately or even on the same day you posted them. We also reserve the right to delete off-topic comments. If you need to contact our Jamath EXCO to share any ideas or issues please use our contact us form.
Notify of

Sort by:   newest | oldest | most voted
Guest
Mohamed Hussain
8 years 8 months ago

migavum arumaiyaana tips.thanks.

wpDiscuz