Kuala Lumpur, Malaysia

இல்லறமே நல்லறம்!!!

இல்லறமே நல்லறம்!!!


  August 24,2010 

அஸ்ஸலாமு அழைக்கும்! அன்பார்ந்த அழகை மக்கள் அனைவருக்கும் ரமதான் முபாரக்!

ஒரு முஸ்லிம் தனது மணவாழ்விற்கு துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்களை அவர்களின் செல்வத்திற்கோவம்சத்திற்கோ,அழகுக்கோ முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் மார்க்கப்பற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மணமுடிக்க தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

ஒரு பெண் தன் திருமண வாழ்வு இறையருள் நிறைந்ததாக அமைய இறையச்சமுள்ள ஒருவரை தன் துணையாக அடையப்பெற வேண்டுமாயின், தான் முதலில்  மார்க்க கடமைகளை முறையாக இறையச்சத்துடன் கடைபிடித்து வாழ வேண்டும்.

தன் மகளுக்கு இறையச்சத்துடன் கூடிய நல்ல கணவன் அமைய வேண்டும் என்றால் அவளை நல்ல குணத்துடன் மார்க்கப்பற்றுடன் மார்க்க அறிவு உள்ளவளாக வளர்க்க வேண்டும்.

தன் மகள் நல்ல குணநலன்களுடன் மார்க்கப்பற்றுள்ளவளாக வளர வேண்டும் என்றால் அதற்கு முன்னுதாரணமாக தாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்இல்லையென்றால் வளரும் தனது குழந்தை சிறந்தவளாக வளர சாத்தியம் இல்லை என்பதனை அவர்கள் உணரவேன்றும்.

தான் சிறந்த குணநலன்கள் கொண்ட மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் தானும் மார்க்கப் பற்றுள்ளவனாக வாழ வேண்டும் என்று ஆண்மகனும் உணரவேண்டும்.

தன் மகனுக்கு மார்க்கப்பற்றுள்ள பெண் வாழ்க்கை துணையாக அமைய வேண்டும் என்றால் நாம் நம் மகனை மார்க்கப்பற்றுடன் சிறந்தவனாக வளர்க்க வேண்டும் என்று ஆணின் பெற்றோர்களும்
 உணரவேண்டும்.

அதே போல் தன் மகன் மார்க்கப்பற்றுடன் வளர வேண்டும் என்றால் நாம் மார்க்கப்பற்றுடன் வாழ்ந்து குடும்பத்தில் இறையச்ச சூழ்நிலையினை அவனுக்கு உருவாக்கித்தர வேண்டும் என்று பெற்றோர்களும் உணரவேண்டும்.

இறையச்சத்திற்கு அவசியமான மார்க்க ஈடுபாடு, மார்க்க விருப்பம், மார்க்க அறிவு போன்றவற்றை அதிகரிக்கச் செய்யும் நிகழ்ச்சிகள்சாதனங்கள்நூல்கள்ஒலி/ஒளி நாடாக்கள்தட்டுக்கள் என்று தமது செல்வம் மற்றும் நேரத்தை மார்க்க காரியங்களில் செலவிடுதல் அவசியம் என்ற சிந்தனையை ஆண்-பெண் என்ற பாகு பாடின்றி சமுதாயத்தின் அனைத்து வர்க்கத்தினருக்கும் அவர் தாயாகவோதந்தையாகவோமகனாகவோமகளாகவோ யாராக இருந்தாலும் இது அவசியம் என்ற பேருண்மையை உணரவேண்டும்.

ஒருவர் மார்க்கக் கடமைகள் எனும் போது, வெறுமனே வணக்கவழிபாடுகள் மட்டும் செய்துவிட்டு தன் மனம் போல் வாழ்ந்து வரலாம் என்ற எண்ணத்தை அவர் மனதிலிருந்து அகற்றி தீய பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள்வீண் விரயங்கள் அகற்றப்பட்ட ஒரு கட்டுப்பாட்டுடன்ஒழுக்கமான, ஆரோக்கியமான, அமைதியான வாழ்க்கையின் பால் தங்கள் வாழ்வை இட்டுச்செல்லணும் என்று  உணரவேண்டும்.

இதற்கும் மேலாக நமது சமூகத்தில் கண்ணீரால் தமது கனவுகளை கரைத்து வாழும்திருமணம் எனும் மணத்தைச் சுவைக்க இயலாத எத்தனையோ அபலை குமர்களுக்கும்அவர்களைப் பெற்றெடுத்த பாவத்தை செய்த பெற்றோர்களுக்கும்அவர்களை ஈவிரக்கமின்றி வரதட்சணை (வாங்குதல்) எனும் பெயர் பெற்ற பயங்கர ஆயுதத்தால் தாக்கும் (விலை) மாந்தர்களுக்கும் அதன் விளைவால் கடன்வட்டி, போதைப் பொருட்கள், மனநோய், பாலியல் குற்றஙகள்,விபச்சாரம், தவறான உறவுகள்தற்கொலைகொலை… போன்ற தீமைகளுக்கு இறையச்சமின்றி விரைந்து செல்லும் மனஉறுதியற்றவர்கள்அதற்கு காரணமானவர்கள்இவற்றை கண்டும் காணாமல் வாழ்ந்துவரும் கருத்தற்ற அகக்கண் இல்லாத குருடர்கள்.. போன்ற அனைவரும் இதை உணரவேண்டும்.

யா அல்லாஹ்! மார்
க்கப்பற்று எனும் ஒளி உள்ளத்தில் குடி கொண்டு, அறியாமை இருளை அகற்றி, நேரான பாதையில் வெற்றி நடை போட்டு, இம்மை மறுமை ஈடேற்றம் பெற இறையச்சத்துடன் கூடிய தூய செயல்பாடுகளின் பால் எங்கள் அனைவரையும் கொண்டு செல்வாயாக!

யா அல்லாஹ்! ஒவ்வொருவரின் மார்க்கப்பற்றை அதிகப் படுத்தி அனைவரையும் தூய்மையான மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருந்து வெற்றி பெற்றவர்களோடு இணைப்பாயாக!

ஆமீன்!…..ஆமீன்!……யாரப்பில்  ஆலமீன்!!!

 

Newsletter Sign Up

For Latest Updates